யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் தேர்தல் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
யாழ். மத்திய பேருந்து நிலைய பகுதியில் இன்று (06) காலை 10.30 மணிளயவில் பரப்புரை நடவடிக்கைகள் ஆரம்பமானது.
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ”நமக்காக நாம்” பிரசார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பரப்புரை நடவடிக்கை
குறித்த பரப்புரை
நடவடிக்கையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த்
தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.