ஜனாதிபதி தேர்தலில் தாம் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவரே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தான் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு
பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது
இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
கட்சியின் முடிவு
அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன், “இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட
முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும்.
கட்சி என்ன முடிவை
எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை
தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு
அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
சங்கு சின்னம்
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அரியநேத்திரன், “தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை
சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு
சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.