தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொது நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
“தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள்
ஒன்றிணைந்து செயற்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
கட்சிக்குள் கலந்துரையாடல்
அதனை இலக்காகக் கொண்ட முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து முதலில் எமது கட்சிக்குள் கலந்துரையாடித் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியில் பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வரவேண்டியது அவசியம்.
எது எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழருக்கு வரலாறு இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.