முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய அரசியலமைப்பில் முழுமையான சுயாட்சியை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கட்சி

புதிய அரசியலமைப்பில் முழுமையான சுயாட்சியை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கட்சியால் பிரேரணை

தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் ‘முழுமையான சுயாட்சியை’ வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சி பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ந.சிறீகாந்தா(N.Srikantha) ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,

புதிதாகப் பதவிக்கு வந்திருக்கும் அரசு ஒரு புதிய அரசமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் இந்த அரசமைப்பு கொண்டிருக்கும் என்றும் அது கூறியிருக்கின்றது.

அரசியல் சூழ்நிலை 

இந்தநிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புதிய அரசமைப்பு ஏற்று அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டாக முன்னெடுக்க தமிழர் தரப்பு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பில் முழுமையான சுயாட்சியை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கட்சி | Tamil Party Pushes For Full Autonomy

இன்றைய அரசியல் சூழ்நிலை இதுவரை காலமும் இருந்திராத அளவுக்கு புதிய சவால்களை எமது மக்களின் முன்னால் வைத்திருக்கின்றது.

நீண்டகாலமாக தமிழ் மக்கள் அரசியல் நீதி கோரி நடத்தப்பட்டு வந்த சகல போராட்டங்களையும் அர்த்தமற்றதாக்குவதற்கு சிங்கள பேரினவாத தரப்புகளால் நன்கு திட்டமிடப்பட்ட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்தநிலையில் தமிழ்த் தேசியம் சார்ந்த சகல அரசியல் சக்திகளும் இணைந்து செயற்பட்டு எமது மக்களுக்கான அரசியல் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ந்தும் பிளவுபட்டு நின்றால் மீட்டெடுக்க முடியாத ஆபத்துக்குள் தமிழ் மக்கள் சிக்குவதும் அவர்களின் அரசியல் உறுதி சிதைவதும் தவிர்க்கப்பட முடியாதவை ஆகிவிடும்.

ஆகவே, இந்த நிலைமையைக் கருத்தில் எடுத்து உறுதியான அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ்த் தேசியத் தரப்புகள் அனைத்தும் நேர்மையாகவும் உண்மையாகவும் முன்வரவேண்டும்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்சி

ஒரே நாட்டுக்குள் தமிழ் மக்களின் தாயத்துக்கு பூரண சுயாட்சி வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையின் பின்னால் தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தும் விரைவாக அணிதிரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

புதிய அரசியலமைப்பில் முழுமையான சுயாட்சியை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கட்சி | Tamil Party Pushes For Full Autonomy

இந்த மிக முக்கியமான விடயத்தை ஆக்கபூர்வமாக கையாளும் விதத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்சியின் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு பிரேரணையை தமிழ்த் தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.

இனிவரும் நாட்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த சகல அரசியல் கட்சிகளோடும் கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு அனைவரும் விரைவாக வரமுடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த வழியில் நாம் அனைவரும் முதல் அடியை எடுத்து வைக்க முடியுமானால் ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்பதை ஏற்படுத்துவது அப்படியொன்றும் கஷ்டமான காரியம் அல்ல”என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.