முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் அரசியலில் இருந்து பிரமுகர்கள் வெளியேற வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் வலியுறுத்தல்

சுமந்திரன் (M. A. Sumanthiran), சிறீதரன் (Shritharan), மாவை (Mavai Senathirajah), குகதாசன் (Shanmugam Kugathasan), டெலோ (TELO), புளொட் (PLOT) போன்ற பிரமுகர்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் (Vavuniya) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பந்தனின் (Sampanthan) தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் இந்த மாற்றங்களையும் புதிய தலைமையையும் வரவேற்கிறோம்.

சம்பந்தனின் கொள்கை

சுமந்திரன், சிறீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும். சம்பந்தனின் கீழ் பணியாற்றிய நபர்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை.

தமிழ் அரசியலில் இருந்து பிரமுகர்கள் வெளியேற வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் வலியுறுத்தல் | Tamil Politicians Should Quit Politics Omp Request

சம்பந்தனின் தமிழர் விரோதக் கொள்கைகளை விமர்சிக்காத எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தாய்மார்கள் கோருகின்றனர். சம்பந்தனின் இறுதிப் பயணத்தின் போது மரியாதை இல்லாதது அவரது கொள்கைகளை தமிழர் நிராகரிப்பதையே காட்டுகிறது.

அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகள், சிங்கள அரசாங்கங்களுடனான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை இல்லாமை, போர்க்குற்றப் பொறுப்புக்கூறலுக்குப் போதிய வாதங்கள் இல்லாமை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிப்பு ஆகியவற்றால் அவரது பதவிக்காலம் குறிக்கப்பட்டது.

பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பது, போர்க்குற்ற விசாரணைகளை புறக்கணிப்பது, இந்து கோவில்கள் மற்றும் தமிழர் நிலங்களை ஒடுக்குவது, திருக்கோணேஸ்வரனின் ஏழு ஊற்று கிணற்றை பௌத்த மதத்துடன் இணைப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிப்பது, கிழக்கு மாகாணத்தில் பெரும்பாமை கொண்ட தமிழர்களை மறுத்து சிறுபான்மை முஸ்லிம்களின் ஆட்சி, இறையாண்மைக்கு எதிரான போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது, சிங்கக்கொடி ஏந்துவது போன்ற விடயங்கள் அடங்கும்.

சுமந்திரன், சம்பந்தன் நாடாளுமன்ற விவாதம்

மற்றும் கறுப்பு தினமாகிய சுதந்திர தினத்தில் பங்கேற்பது. சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளை தமிழீழத்தில் இறக்குமதி செய்தமை மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக்கு சிங்கள அரசாங்கத்தை ஆதரித்தமை.

தமிழ் அரசியலில் இருந்து பிரமுகர்கள் வெளியேற வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் வலியுறுத்தல் | Tamil Politicians Should Quit Politics Omp Request

சம்பந்தனுக்கு சிங்கள மாளிகை எடுப்பதற்கான சுமந்திரன், சம்பந்தன் நாடாளுமன்ற விவாதம் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தியது. சம்பந்தன் வாதிட்ட கொள்கைக்கு எதிரான கொள்கையைத்தான் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள். அந்த கொள்கைகளாக பின்வருவன அமைகின்றன.

வடகிழக்கு இணைந்த தமிழர் இறையாண்மை, போர்க்குற்றங்களுக்கு ஐசிசி மூலம் பொறுப்புக்கூறல், தமிழர் தலைமை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை, தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்த அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஆதரித்தல், தமிழ் தலைமைகளின் பதவிக்காலங்களில் மட்டுப்படுத்துதல், தமிழர் போர் மரணங்களை நினைவு செய்தல், தமிழர்களை ஒன்றிணைத்தல், ஐக்கிய இலங்கையை நிராகரித்தல், தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை வெளியேற்றுதல் என்பவையாகும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.