முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன்

மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே
நுவரெலியா மாவட்டமாகும். மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில்
எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும்.

எனவே, மக்களுடன்
இருக்கும் எம்மை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள், ஆணை வழங்குவார்கள் என்ற
உறுதியான நம்பிக்கை உள்ளது என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட
நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் நாம்
தனித்துவமாகக் களமிறங்கியுள்ளோம். தேசியப் பட்டியலில் எம்மவர்களுக்கே
முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தலவாக்கலை மடக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியவை பின்வருமாறு,

நுவரெலியாவில் தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன் | Tamil Representation In Nuwara Eliya

மலையக மக்களின் அரசியல் 

மலையக மக்களின் அரசியல் இருப்பென்பது மிக முக்கியம். எனவே, நடைபெறவுள்ள
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்கள் நன்கு
சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

நமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை
பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றம் வேண்டுமெனக் கூறி சிலர் வந்துள்ளனர். அவர்களை நம்பினால் கடைசியில்
ஏமாற்றம்தான் ஏற்படும். அது தனி நபருக்கு ஏற்படும் தோல்வி அல்ல, ஒரு
சமூகத்தின் தோல்வியாக மாறிவிடும்.

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஐந்து தமிழர்கள்
நாடாளுமன்றம் சென்றிருந்தோம். அதில் நானும், எமது பொதுச்செயலாளர் ஜீவன்
தொண்டமானும் ஆளுங்கட்சியில் இருந்தோம்.

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு நாம் அதிக முக்கியத்துவம்
வழங்கியுள்ளோம்.

எமது சமூக முன்னேற்றத்துக்கு கல்வியே சிறந்த ஆயுதம். அதனால்தான் கல்விக்கு
முன்னுரிமை வழங்கினோம்.

நுவரெலியாவில் தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன் | Tamil Representation In Nuwara Eliya 

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை

தேர்தலில் வெல்ல முடியாது என தெரிந்தும் சிலர் பொதுத்தேர்தலில்
போட்டியிடுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன்னர் மலையகம் வந்துசென்றவர்கள்,
தற்போதுதான் மீண்டும் வருகின்றனர்.

எனவே, அவர்களின் நோக்கம் என்னவென்பதை
புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் மக்களோடு மக்களாக வாழ்கின்றோம். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின்போது
அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுத்துவருகின்றோம்.

நுவரெலியாவில் தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன் | Tamil Representation In Nuwara Eliya 

எனவே,
எம்மை நாடாளுமன்றம் அனுப்பு வையுங்கள்.

யானை சின்னமென்பது மலையக மக்களுக்கு நன்கு பரீட்சயமான சின்னம். ஐக்கிய தேசியக்
கட்சியுடன் இணைந்து நாம் தனித்துமாக போட்டியிடுகின்றோம்.

நானும், எமது
பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், சக்திவேலும் போட்டியிடுகின்றோம். எம்மை
நாடாளுமன்றம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.