முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு வருட சிறப்பு பூசைகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை
புத்தாண்டு சிறப்பு பூசைகள் இன்று அதிகாலை முதல் ஆலய பிரதம குரு சுதர்சன
கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம்பெற்றன.

காலை 4:00 மணியளவில் சுப்பிரபாதமும், 5:00 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15
மணியளவில் சங்கற்பம்/ அபிசேகமும், 6:00மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15
மணியளவில் வசந்த மண்டப பூசையும், 6:45 மணியளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம்
பெற்றது.

அதனை தொடர்ந்து 7:30 மணியளவில் கைவிசேசமும் வழங்கப்பட்டு 8:15
மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூசைகள் இடம் பெற்றதுடன்
வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி வலம்வந்தார்.

இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடியவர்கள்
கலந்துகொண்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அன்று
அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது.

இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன்
பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று
சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம்
நடாத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த
வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ
விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும்
ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

மூதூர் -மல்லிகைத்தீவு திரு மங்களேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (14)
காலை சித்திரைப் புத்தாண்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதில் அதிகளவான சைவ
மக்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு பூசை வழிபாடுகளுக்கு ஆலயத்துக்கு வருகை தந்தோர் தங்களுக்குள் கைகளை
குழுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது. 

தமிழரசு கட்சி அலுவலகத்தில் புத்தாண்டு பொங்கல் மற்றும் கைவிசேசம்…!

இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளையின் சித்திரை புத்தாண்டு பழங்களும்,
கைவிசேசமும் இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலராளர் எம் ஏ சுமந்திரன் தலமையில்
இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மற்றும்
வடமராட்சி கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

தமிழ்,சிங்கள புத்தாண்டு விசேட பூஜை வழிபாடுகள் திருகோணமலை வரலாற்று சிறப்பு
மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயம் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் இன்று (14)
காலை இடம்பெற்றது.

பூஜை வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான இந்து மக்கள் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமான முறையில் தமிழ் சிங்கள புத்தாண்டு
கொண்டாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில், தமிழ்
விசுவிவாச புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று
பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய முருகப் பெருமான்
வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதியுலா
காட்சியளித்தார்.

இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை
பெற்றுசென்றனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும்
ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா
வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக
இடம்பெற்றது.

வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய
வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம்
திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான நேற்று (14.04) தேர்த் திருவிழா மகோற்சவ
பிரதம குரு தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகங்கள்
இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில்
பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியாவர்களுக்கு
அருள்பாலித்துடன், பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்க பிரதிஸ்டை
செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன்
வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு
தினத்தில் அருள்பாலித்தார்.

புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு
பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன்,
தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கைவிசேஷம் வழங்கல்

தமிழ் சித்திரைப்புத்தாண்டான இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி
அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் கைவிசேஷம்
வழங்கப்பட்டது.

கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து
கொண்டனர்.

 நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ‘விசுவாவசு’ சித்திரை புத்தாண்டு சிறப்பு
பூஜைகள் இன்று (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில்
இடம்பெற்றது.

காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15
மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15
மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம்
பெற்றது.

அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில்
பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள்
கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு
பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் | Tamil Sinhala New Year Celebration Sri Lanka

சித்திரை புத்தாண்டில் சித்திரைத் தேரில் அருள்பாளித்தார் பிள்ளையார்

புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் பச்சை நிற விவசாய வயல்கள் புடைசுடலா
பன்னங்கண்டி பகுதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் திருக்கோயில் சித்திரை
தேர் திருவிழாவின் போது பக்தர்கள் பறவை காவடி, பால்சொம்பு மற்றும் அங்கு
பிரதட்டை போன்ற நேர்த்திக்கடன்களும் செலுத்தி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர் திருவிழா
வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம் பெற்றமையால் கிளிநொச்சியில்
பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தந்த அடியவர்கள்
பிள்ளையார் பெருமானை வழிபடுவதன் மட்டுமல்லாது புத்தாண்டு வாழ்த்துக்களை
பரிமாறிக் கொண்டதை சிறப்பம்சமாகும்

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.