முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கிலுள்ள தமிழர்கள் விரைவில் அழிந்துபோகும் அபாயம் : கஜேந்திரன் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் 15
ஆண்டுகளில் இருந்த இடம்தெரியாது அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தேர்தல் புறக்கணிப்பு
பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நில அபகரிப்பு

மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுடைய தலைநகரமாக இருக்ககூடிய திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப்
பிரிவில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்படு 2
ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டுகின்றது.

கிழக்கிலுள்ள தமிழர்கள் விரைவில் அழிந்துபோகும் அபாயம் : கஜேந்திரன் தெரிவிப்பு | Tamils In East Are In Danger Of Disappearing

இந்த
செயற்பாடுகள் நடைபெறுகின்றபோது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித்
பிரேமதாஸ எதிர்கட்சி தலைவராகவும் அநுர குமார திசாநாயக்க வலிமையான ஒரு
எதிரணியினுடைய கட்சி தலைவராகவும் நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும்
போது தான் இந்த பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 அதேபோல மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் 3
இலட்சம் மாடுகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு
பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவை
எல்லாம் நடைபெறுகின்றபோது சஜித்தோ, அநுரவோ, ரணிலோ இதனை தடுப்பதற்கு எந்தவிதமான
நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிழக்கு மாகாணம்

இன்று அம்பாறை மாவட்டம் முற்றாக பறிபோவிட்டது அதேபோல திருகோணமலை மாவட்டமும்
கிட்டத்தட்ட மிகப் பெரியளவில் பறிபோய்விட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பறிபோகத்
தொடங்கிவிட்டது.

கிழக்கிலுள்ள தமிழர்கள் விரைவில் அழிந்துபோகும் அபாயம் : கஜேந்திரன் தெரிவிப்பு | Tamils In East Are In Danger Of Disappearing

இந்த நிலையில் கிழக்குடன் வடக்கு இணைந்தால் மாத்திரம் தான்
கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இணையும்போது தங்களுடைய
இருப்பை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.

இந்த இணைவு நடைபெறவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ்
மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம்தெரியாது அழிந்து போகக்கூடிய ஆபத்து
இருக்கின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.