விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து இருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. அவர் ஹிந்தியில் பிரபலமான நடிகை தான். குறிப்பாக ‘ஆஷிக் பனாயா’ படத்தில் நடித்து இருந்தது அவர் தான்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் நானா படேகர் மீது மீ டூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


வாரிசு பட நடிகை ஜெயசுதாவின் மகன்.. பாகுபலி படத்தில் நடித்தாரா?
கண்ணீருடன் புகார்
இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தான் 2018ல் மீ டூ புகார் சொன்னதில் இருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள் என புகார் கூறி இருக்கிறார்.
கண்ணீருடன் அவர் கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருப்பது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
View this post on Instagram
தனுஸ்ரீ தத்தா வெளியிட்ட மற்றொரு வீடியோவில் நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான ஒரு சத்தம் வருகிறது எனவும், அது பற்றி புகார் கொடுத்ததும் அது தொடர்ந்து கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது என கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பல வருடங்களாக இப்படி கொடுமையை சந்திப்பதால் தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
View this post on Instagram

