அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
“உலகிலேயே மிகக் குறைந்த அரச வருமானம் இருந்தபோதிலும், நாடு இப்போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இயங்குகின்றது.
வரிச்சட்டத்தில் உள்ள மேல்முறையீடு
ஒரு நாட்டில் வரி நிலுவை இருப்பதை அரசு தெளிவாக மக்களுக்கு கூற வேண்டும். அதேநேரம் இலங்கையின் வரிச்சட்டத்தின்படி, பொதுமக்களுக்கும் மேன்முறையீடு செய்யும் உரிமையுள்ளது.
இதன்படி வரியை செலுத்தமுடியாது என்று கூறி பொதுமக்கள் நீதிமன்றுக்கு செல்லமுடியும்.
இந்தநிலையில், இதுபோன்ற செயற்பாடுகளே இலங்கையில் இடம்பெறுகின்றன என்று ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்