நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலே ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொது வேட்பாளருக்கு வேலை செய்யாமல் மறைமுகமாக ரணில் விக்ரமசிங்கவுக்கும் வேலை செய்து துரோகம் செய்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ரணிலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கையூட்டாக கொடுக்கப்பட்ட நிதியின் விபரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,