முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர்

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் கலந்து கொள்ள மறுப்பு
தெரிவித்து வெளியேறியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று (25) வவுனியாவில் இடம்
பெற்றது.

இதையடுத்து, ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேசிய கூட்டணி

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் தமிழ் தேசிய
கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் சுமார் மூன்று மணி நேர கலந்துரையாடல் இடம்
பெற்றுள்ளது.

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர் | Telo Leader Boycott Media Briefing And Leave

இதன் பின்னர் ஊடக சந்திப்பு இடம் பெற்று இருந்து நிலையில், ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணியின் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட
பொழுதிலும் டெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் கலந்து
கொள்ளாத பட்சத்தில் கருணாகரனை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்தும் அவரை ஊடக சந்திப்பில்
கலந்து கொள்ளுமாறு புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்
சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் வலியுருத்தியுள்ளனர்.

உயர்மட்ட பிரதிநிதிகள்

இருப்பினும், எடுக்கப்பட்ட முடிவுகளில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் எனவும் ஆகவே தான் இந்த
ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூட்ட மேசையிலிருந்து எழுந்து
சென்றுள்ளார்.

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர் | Telo Leader Boycott Media Briefing And Leave

இதன் காரணமாக கூட்ட முடிவுகள் சில வேளைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமா?
என்கின்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ பி ஆர் எல் எப் தலைவர்
க. சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் கருணாகரன், ஜனநாயக போராளிகள்
கட்சியின் சார்பில் செயலாளர் க. துளசி, சமத்துவக் சார்பில் மு. சந்திரகுமார்,
உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.