முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் மீண்டும் இழுபறி நிலை

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை
நியமிப்பது என்பது தொடர்பாக நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக்
கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களை கைப்பற்றி உள்ள
நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 05 ஆசனங்கள் தேவைப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தவிசாளர்களாக முரளி மற்றும் நிலாந்தனை
கட்சி தெரிவு செய்துள்ள நிலையில் இருவரில் யாருக்கு ஏனைய கட்சிகளின்
பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு கட்சியின்
உயர்மட்ட குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது. 

கட்சியின் மாவட்டகிளை கூட்டத்தில்

அதற்கமைய கடந்த 31ஆம் திகதி தனக்கான பெரும்பான்மை ஆதரவை முரளியால் காட்ட
முடியாமல் போன நிலையில் நிலாந்தன் தனக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சியின்
உயர்மட்ட குழுவுக்கு காட்டியிருந்தார்.

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் மீண்டும் இழுபறி நிலை | Tension Again Chairman Chenkalady Pradeshiya Sabha

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்டகிளை
கூட்டத்தில் முரளிக்கு மீண்டும் ஒரு சந்தர்பத்தை வழங்குவதற்கு
தீர்மானிக்கப்பட்டது.

அதன் படி முரளி எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் தனக்கான பெரும்பான்மை
ஆதரவை எழுத்து மூலம் கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்ட வேண்டும் என்றும்
அவ்வாறு காட்ட தவறினால் தனக்கான பெரும்பான்மை ஆதரவை காட்டி நிலாந்தன் கட்சி
தவிசாளராக முன் நிறுத்தும் நிலையேற்படலாம் என கட்சியின் மட்டக்களப்பு மாவட்டமுக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.