சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு (CID) முன்பாக பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அங்கிருந்த நாமல் ராஜபக்சவினுடைய ஆதரவாளர்கள், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஆளும் கட்சியின் ஆதரவாளரான யூடியுப் செய்தியாளர் ஒருவர் நாமலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமையால் இரு தரப்புக்கும் இடையே கருத்து முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.
விரைந்த பொலிஸார்
எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு பதற்ற நிலையை கட்டுப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.