தேரே இஷ்க் மே
நடிகர் தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் தேரே இஷ்க் மே.
இப்படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான தேரே இஷ்க் மே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் கலவையான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

வசூல்
இப்படத்தின் வசூல் குறித்து படக்குழுவினர் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இதுவரை தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் ரூ. 152 கோடி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம்
ராயன் படத்திற்கு பின் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்த தனுஷ் படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


