தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கிவிட்டார். இதனால் சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசி திரைப்படமாகும். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


4 நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
கடந்த ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிறந்தநாள் பார்ட்டி
தனது பிறந்தநாளான கடந்த ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் பார்ட்டி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதில் திரையுலக பிரபலமான பிரியங்கா மோகன், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, கல்யாணி ப்ரியதர்ஷன், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ், பிரபல DJ கவுதம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ



