தளபதி விஜய்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். 33 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர், தற்போது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
அரசியலுக்கு சென்றுள்ள காரணத்தினால் ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது. விஜயின் கடைசி படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.


மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். வருகிற 2026 பொங்கலுக்கு இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகரும், டப்பிங் கலைஞருமான சுரேந்தர், விஜய்யின் தாய் மாமன் என்பதை நாம் அறிவோம். சுரேந்தருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள் பல்லவி சுரேந்தர் அவ்வப்போது தனது அத்தை ஷோபா சந்திரசேகருடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் விரும்பி சாப்பிடும் உணவு
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் விருப்பமான உணவு குறித்து பல்லவி சுரேந்தர் கூறியுள்ளார். இதில் “நான் ரொம்ப நாளா அண்ணா கிட்ட இதைத்தான் சொல்றேன், வீட்டு வந்தாருன்னா அவருக்கு தோசை சிக்கன் குழம்பு செஞ்சி தரணும். அவருக்கு அது ரொம்ப பிடித்த உணவு” என கூறியுள்ளார்.


