கோட்
2024ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் தளபதி விஜய்யின் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமும் இதுவே ஆகும்.
ஹீரோவாகவும், வில்லனாகவும் இப்படத்தில் கலக்கியிருந்தார் விஜய். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.
விஜய்யும், சங்கீதாவும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்.. அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நபர்
தொலைக்காட்சியில் விஜய்யின் கோட்
உலகளவில் ரூ. 440 கோடி வசூல் செய்து கோட். இந்த நிலையில், திரையரங்கம் மற்றும் OTT-யில் கொண்டாடப்பட்ட கோட் திரைப்படம் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஆம், கோட் படத்தை விரைவில் ஒளிபரப்பாக போவதாக ஜீ தமிழ் அறிவித்துள்ளனர். ஆனால், எந்த நாளில், எந்த நேரத்தில் ஒளிபரப்பப்போகிறோம் என தெரிவிக்கவில்லை. அநேகமாக 2025 புத்தாண்டு அன்று ஜீ தமிழில் கோட் படம் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🤜 GOAT FEVER ON 🤛
The G.O.A.T | Coming Soon…#TheGOAT #TheGreatestOfAllTime #ZeeTamil @actorvijay @vp_offl @thisisysr pic.twitter.com/uxo5eLYm9S— Zee Tamil (@ZeeTamil) December 22, 2024