கேம் சேஞ்சர்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி வெளிவரவுள்ளது. ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஊழல் செய்யும் அரசியல் வாதிக்கும், நேர்மையான அரசு அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் கேம் சேஞ்சர் என ட்ரைலரில் காட்டியுள்ளனர். ஆனால், படத்திற்குள் இன்னும் பல சர்ப்ரைஸ்களை ஷங்கர் வைத்திருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
முதல் சாய்ஸ் ஹீரோ
பிரமாண்டமான முறையில் வெளிவரவிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் ஷங்கரிடம் கூறினார் என்பதை நாம் அறிவோம். அதன்பின் இதனை முழுமையாக தயார் செய்த இயக்குனர் ஷங்கர், முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக தளபதி விஜய்யை நடிக்க வைக்கலாம் என எண்ணியுள்ளார்.
கதையை விஜய்யிடமும் கூறியுள்ளார். விஜய்க்கும் படம் பிடித்துப்போக ஓகே என கூறிவிட்டாராம். ஆனால், இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால், வேறு எந்த படத்திற்கு ஒன்றரை ஆண்டு நடிக்க முடியாது என ஷங்கர் கூறிய கண்டிஷன் காரணமாக, இப்படத்திலிருந்து விஜய் விலகியதாக கூறப்படுகிறது.