ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள (Thalatha Athukorala) நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (03.01.2025) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremeisinghe) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன (Wajira Abeywardane) குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் வெளிநாட்டு விஜயம்
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இதற்கு முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) பதவி வகித்தார்.
இதேவேளை இந்தியா மற்றுத் நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க நேற்று (02) மாலை நாடு திரும்பிய நிலையில் கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்.
இதன்போது உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு ஐ.தே.க.வை பலப்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்கள் குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.