Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், தாம் ஏற்கத் தயார் என அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரசாரத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு, மீண்டும் கட்சிக்கு செல்லப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அத்துகோரள தெரிவித்துள்ளார்
முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுத்த தீர்மானம் குறித்து அதிருப்தி தெரிவித்த அத்துகோரள, நீண்ட உரையை நிகழ்த்திய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகினார்.
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இரண்டு தலைவர்களும் சுயநலமாக இருப்பதாக அவர், அதன்போது குற்றம் சாட்டினார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளமை தாம் ஏமாற்றமடைவதாகவும், இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அத்துகோரள, தமது உரையில் தெரிவித்திருந்தார்.