ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்று. அதில் சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், தமன் என பலரும் நடித்து இருந்தார்கள்.
சித்தார்த் ஹீரோ மற்றும் ஜெனிலியா ஹீரோயின் என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் ஹீரோ, ஹீரோயினை விட அதிகம் சம்பளம் இவருக்கு தான் கொடுத்தார்களாம்.
தமன்
தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் அந்த படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் அதை நிராகரித்துவிட்டு இசையமைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து இருக்கிறார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு தான் பாய்ஸ் படத்தில் அதிகம் சம்பளம் கொடுத்தார்கள் என கூறி இருக்கிறார்.
“நான் ஹீரோ” என சித்தார்த் கூறினாலும், ‘எனக்கு தான் அதிகம் சம்பளம்’ என சொல்லி அவரை கலாய்ப்பாராம் தமன்.