ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு
பயந்துவிட்டது என்பதையே கைது சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ரேணுக பெரேராவின் கைது சம்பவம், நாம் எதை செய்தாலும் மௌனமாக இருங்கள் என அரிசயல் எதிராளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும்.
அரசாங்கம் பயந்துவிட்டது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, இந்த அரசாங்கம் பயந்துவிட்டது என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. எமது கட்சிமீது இவ்வளவு பயம் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
1989 இல் ஜே.வி.பியினர் இனவாதத்தை பரப்பும்போது அதற்கு எதிராக போராடிய விஜேகுமாரதுங்கவின் கட்சியில் இருந்தவர்தான் ரேணுக பெரேரா.
ரேணுக பெரேரா இனவாதி அல்ல. அவர் இனவாதத்துக்கு எதிராக செயற்பட்ட நபர். இன ஐக்கியத்துக்காக போராடியவர். அப்படியான ஒருவரை கைது செய்துள்ளமை அரசாங்க ஒடுக்குமுறையாகும்.” என கூறியுள்ளார்.