முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவசரமாக கூடவுள்ள பிரித்தானிய நாடாளுமன்றம்

பிரித்தானிய நாடாளுமன்றம் அவசரமாக கூடியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய நாடாளுமன்றம் பொதுவாக சனிக்கிழமைகளில் கூடாத நிலையில், ஈஸ்டர் விடுமுறையிலிருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று உடனடியாக கூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய வரலாற்றில், இரண்டாம் உலகப்போரி ன்போதுதான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியது என்பதால், இன்றைய நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள் என சட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் முதலீடு 

இப்படி பிரித்தானிய நாடாளுமன்றம் அவசரமாக கூடக் காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஸ்டீல் மீது வரி விதித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் ஸ்டீல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் British Steel நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைக் களைவதற்காகத்தான்.

அவசரமாக கூடவுள்ள பிரித்தானிய நாடாளுமன்றம் | The British Parliament Convenes Urgently

இந்தநிலையில், British Steel என்னும் பிரித்தானிய ஸ்டீல் நிறுவனம், Jingye Group என்னும் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

இதற்கு முன்பே, பல சவால்களை சந்தித்துவரும் அந்நிறுவனம், 1.2 பில்லியன் பவுண்டுகளை British Steel நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், நாளொன்றிற்கு சுமார் 700,000 பவுண்டுகள் இழப்பை சந்தித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வரி

இதற்கிடையில் ட்ரம்பின் வரிவிதிப்புகளும் சேர்ந்துகொள்ள, Jingye Group ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதனால், மூடப்படும் நிலையிலிருக்கும் British Steel நிறுவனத்தைக் காப்பாற்ற பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.

அந்நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக அதாவது, பிரித்தானியாவின் ஸ்டீல் உற்பத்தியை தொடர்வதற்காக, அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

அவசரமாக கூடவுள்ள பிரித்தானிய நாடாளுமன்றம் | The British Parliament Convenes Urgently

அரசே British Steel நிறுவனத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளவும், அதை தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காகத்தான் இன்று பிரித்தானிய நாடாளுமன்றம் அவசரமாகக் கூட இருகப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.