நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்குவது
சட்டவிரோதமானது என்றும், இது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் என்றும்
பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பிலவலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்குவதைத்
தடை செய்யும் ஒரு நாடாளுமன்றத் தீர்மானத்தை தயாசிறி ஜயசேகர கொண்டு வந்துள்ளார்.
இந்த கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்கியதன் காரணமாக திசைக்காட்டி
உறுப்பினர்கள் 159 பேரும் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட
வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அலுவலக கொடுப்பனவு
அலுவலக கொடுப்பனவுக்காக ரூ. 1 இலட்சம் வழங்கப்படுகிறது.
இது அலுவலகத்தை பராமரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
இதை கட்சி நிதியத்திற்கு வழங்குவது பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துதலாகும்.
மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழங்கப்படும் இந்த கொடுப்பனவுகளை. கட்சிக்கு
நன்கொடையாக வழங்கினால், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உறுப்பினர்கள்
தயங்குவார்கள்.
“குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்பட்ட பொதுப் பணத்தை அனுமதி இல்லாமல் வேறு
நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது பொதுச் சொத்தை அபகரித்தல் ஆகும். இது ஒரு
பிணையில் வெளிவர முடியாத குற்றம்,” என்று அவர் எச்சரித்தார்.
“திசைக்காட்டி” உறுப்பினர்கள் 159 பேரும் இந்த கடுமையான குற்றத்தைச்
செய்வதாக அவர் நினைவுபடுத்தினார்.
இதன் விளைவாக, 2029 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் ஒரு அறை “திசைக்காட்டி”
உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.