சீனாவிலுள்ள (China) சுற்றுலாதளமொன்று அங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது.
இந்தநிலையில், இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.
சோப்பு நுரை
இருப்பினும், அந்த இடத்தில் பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை சுற்றுலா பயணிகள் கவனித்துள்ளனர்.
இதையடுத்து, ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளனர்.
பின்பு, அந்த சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் பின்பு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.