வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கு (Vijitha Herath) அருகிலேயே இருக்கும் ஆபத்து ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் (Chamara Sampath) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த எச்சரிக்கையானது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் இலங்கைக்கான கென்யா தூதரகத்தில் பணியாற்றிய மற்றும் தற்போது அமைச்சர் விஜித ஹேரத்தின் தனிப்பட்ட செயலாளராகவிருக்கும் சுனில் த சில்வா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ளது.
முறைக்கேடான செயற்பாடு
இது தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த சாமர சம்பத், கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் அலி சப்ரியை போலவே அமைச்சர் விஜித ஹேரத்தும் தனது கடமையை சிறப்பாக செய்து கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
எனினும், விஜித ஹேரத்தின் தனிப்பட்ட செயலாளராக தற்போது கடமையாற்றும் சுனில் த சில்வா என்பவர் இலங்கைக்கான கென்யா தூதரகத்தில் பணியாற்றிய போது பெண் அதிகாரி ஒருவரிடம் முறைக்கேடாக நடந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
எச்சரிக்கை
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் இலங்கைக்கு வருகை தந்து, அது தொடர்பில் முறைப்பாடொன்றை முன்வைத்திருந்ததாகவும், ஆனால் அந்த விடயத்தை அப்போதைய அரசாங்கம் மூடி மறைத்திருந்தாகவும் சாமர சம்பத் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், விஜித ஹேரத் போன்ற அமைச்சரிடம், நாட்டின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும், அமைச்சர்களின் மதிப்பை இல்லாமல் செய்யும் வகையிலான ஒருவர் இணைந்துள்ளதாக அவர் எச்சரித்தார்.
you may like this
https://www.youtube.com/embed/it0ikltaf7E