முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

24 வருடங்களுக்கு பிறகு வடகொரியா செல்லும் புடின்

கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக ரஷ்ய(Russia)  அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியா(North korea) செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்கிறார்.

வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA யும் இந்த விஜயத்தை அறிவித்துள்ள போதும் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்(Kim Jong Un) கடந்த செப்டம்பரில் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது புடினுக்கு( Vladimir Putin)அழைப்பு விடுத்திருந்தார்.

வடகொரியா செல்லும் புடின்

புடின் கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பியோங்யாங்கிற்கு (Pyongyang)விஜயம் செய்தார், அவர் முதன்முதலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

24 வருடங்களுக்கு பிறகு வடகொரியா செல்லும் புடின் | The First Time Russias Putin To Visit North Korea

அப்போது அந்நாட்டை ஆண்ட கிம்மின் தந்தை கிம் ஜாங் இலை(Kim Jong-il) சந்தித்தார்.

இந்த விஜயத்தின் போது ரஷ்யாவும் வடகொரியாவும் பாதுகாப்பு பிரச்சினைகளை உள்ளடக்கிய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என புடினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தம் வேறு எந்த நாட்டுக்கும் எதிராக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவுக்குப் பிறகு, புடின் ஜூன் 19-20 திகதிகளில் வியட்நாமுக்கு(Vietnam) விஜயம் செய்வார் எனவும் கூறப்படுகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்