இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதில் எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்வாக்கு செலுத்தப்படவில்லை
அதில் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
ஜனாதிபதித் தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்கள் கோரும் திகதி ஆகியவற்றை ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.