முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இனவாத அரசியலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது : எச்சரிக்கும் அநுர தரப்பு

எந்தவொரு தரப்பினருக்கும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, புதிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த அல்லது அவமதிப்பை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது தண்டனை சட்டக் கோவையின் கீழோ எவரும் கைதுசெய்யப்படவில்லை.

கடந்த ஒருவார காலமாக நாட்டில் மற்றுமொரு கோணத்தில் இனவாதத்தைத் தூண்டுவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து அவதானிக்கப்பட்டுள்ளது.

இனவாத செயற்பாடு

இனவாதத்தை ஒழிப்பதற்கே இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை வழங்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகள் பயன்படுத்துவதைத் தடைசெய்து அப்போதை அரசாங்கத்தால் 2011 ஆம் ஆண்டில் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

இனவாத அரசியலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது : எச்சரிக்கும் அநுர தரப்பு | The Government Will Never Allow Communal Politics

எனவே அதற்குப் புறம்பான செயற்பாடுகளால் மீண்டுமொரு முறை இனவாதம் தூண்டப்பட்டு, நிலைமை தீவிரமடையுமாயின் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

புதிய சட்டங்களைக் கொண்டுவந்து இதனை ஒழிப்பதற்கு தற்போது அவகாசம் இல்லை ஆகையினால் தற்போது தலைதூக்கிவரும் இந்த திட்டமிட்ட இனவாத செயற்பாடுகளை முழுமையாக முறியடிப்பதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்களையே உபயோகிக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.