முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் : அரசை கடுமையாக விமர்ச்சிக்கும் சுமந்திரன்

 பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றான வகையில் அநுர அரசாங்கத்தால், வெளியிடப்பட்டுள்ள வரைவில், முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வரைவில் மோசமான விடயங்கள்  

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கங்களை விடவும், மோசமான விடயங்கள் இந்தப் புதிய வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன.

படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் : அரசை கடுமையாக விமர்ச்சிக்கும் சுமந்திரன் | The Law Protecting The State From Terrorism Is Bad

தேசிய மக்கள் சக்தி எதிரணியாக இருந்த வேளையில், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனியான சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையிலும், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, பிறிதொரு சட்டத்தினால் அது பதிலீடு செய்யப்படும் எனக் கூறப்படவில்லை.

படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் : அரசை கடுமையாக விமர்ச்சிக்கும் சுமந்திரன் | The Law Protecting The State From Terrorism Is Bad

இவ்வாறான பின்னணியில், பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், பிறிதொரு சட்டத்தைக் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முற்றாக எதிர்ப்போம்

அந்தச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத் முற்றாக எதிர்ப்போம்.

நீதியமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவின் உள்ளடக்கங்கள் மிகமோசமானவையாக உள்ளன.

படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் : அரசை கடுமையாக விமர்ச்சிக்கும் சுமந்திரன் | The Law Protecting The State From Terrorism Is Bad

அவைபற்றி விரிவாக ஆராய்ந்து தமது கரிசனைகளை வெகுவிரைவில் நீதியமைச்சுக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்