நாட்டு மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நலத்திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான காணி பரிமாற்றம்
மேலும், சுதந்திரமான காணி பரிமாற்றத் திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் கிராம உத்தியோகத்தர்களைத் தவிர வேறு ஒரு குழுவிற்கு அதிகாரம் வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி அவர்களுக்கு அந்த நன்மையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.