ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு
நாளை(10) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின்
அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விஜயத்தை
மேற்கொள்கின்றார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2025 ஆம் ஆண்டு டுபாயில்
நடைபெறும் உலக உச்சி மாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.
அரபு இராச்சியம் பயணம்
உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரச
தலைவர்களுடன் ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின்
சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
எனவும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பல துறைகளில் ஒத்துழைப்பை
மேம்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதி ஜனாதிபதி மற்றும்
பிரதமர் ஷேக் மொஹமட் பின் ராஷித் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தகவல் தொழில்நுட்பம், செயற்கை
நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் உலகளாவிய
முன்னணி நிறுவனங்களின் பல பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.