முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுமந்திரனால் முறிக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பொது நிலைப்பாடு

தமிழ் தேசிய கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டுக்கு வந்து அறுதிப் பெரும்பான்மையை கடந்த தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனால் தடைப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பேரவையினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை இன்று யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார்  சந்தித்து
கலந்துரையாடினார்.

இதன்போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

சந்திப்பு தொடர்பான கருத்து

சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை
தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

சுமந்திரனால் முறிக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பொது நிலைப்பாடு | The Public Stance Broken By Sumanthiran

“இலங்கை அரசாங்கம் தவறான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துவருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம்
தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டதாகவும் தேசிய மக்கள் சக்திக்கு
வாக்களித்துள்ளதாகவும் தங்கள் தீர்வையை தமிழ் மக்களும் ஏற்பதாக பிரசாரம்
செய்து வரும் நெருக்கடி மிக்க காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது
தொடர்பாக பேசப்படுகிறது.

இனப்பிரச்சினை தொடர்பாக பேசும் போது நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட ஏக்ய
ராஜ்ய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும் என தேசிய மக்கள் சக்தி கூறிவருகிறது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் எட்டு நாடாளுமன்ற
உறுப்பினர்களை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டுக்கு வந்து
அறுதிப் பெரும்பான்மையை காட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணி நாம் பேச முயற்சித்தோம்.

அந்த முயற்சி சுமந்திரன் தமிழ் அரசுக்
கட்சியின் செயலாளராக வந்த பிறகு முறிக்கப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கும்
தருணத்தில் தொல். திருமாவளவனுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

தமிழ் இனப்பிரச்சினைக்கு இந்திய நிலைப்பாடு முக்கியம். இந்திய இலங்கை
ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக
உத்தியோகபூர்வமாக இலங்கை அரசை ஏற்க வைத்த ஒப்பந்தமாகும்.

அந்த ஒப்பந்தத்தை
நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக
நிறைவேற்றிய 13ம் திருத்தம் என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட
விடயங்களை மறுத்தது” என கூறியுள்ளார்.

மேலதிக தகவல் – கஜி

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.