உலக மக்கள் தொகை நாளை 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என அறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையானது நேற்று (30) அமெரிக்க (USA) மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை உயர்வு
அதன் அறிக்கையில்,
2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் (7 கோடி) உயர்ந்துள்ளது .
2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் (2024) மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.
மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி
மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.
ஷகிரிபாட்டி (Kiribati) தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.