ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருப்பார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த OTT தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.
ஸ்வீட் ஹார்ட்:
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்து வெளிவந்த திரைப்படம் ‘ஸ்வீட் ஹார்ட்’. இதில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை யோஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் OTT தளங்களில் வெளியாக உள்ளது.
குட் பேட் அக்லி படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பெருசு:
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் ‘பெருசு’. இந்த படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா என பலர் நடித்துள்ள காமெடி திரைப்படமாக வெளியான இப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.
சாவா:
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.