ஒரு படத்தின் வெற்றிக்கு எப்படி கதாநாயகன் காரணமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு படத்தின் வில்லனுக்கும் வெற்றியின் மீது பங்கு உண்டு.
அந்த வகையில், இந்த 2024 – ம் ஆண்டு வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.
கமல்ஹாசன்:
பலவிதமான கெட்டப்புகளில் நடித்து உலக நாயகன் என்ற பட்டத்தோடு இன்று தமிழ் சினிமாவில் வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 AD படத்தில் 10 நிமிட காட்சியில் மட்டும் வில்லன் ரோல் எடுத்து நடித்திருப்பார். நடித்தது 10 நிமிடம் இருப்பினும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
விடுதலை 2 படத்திற்காக கருணாஸ் மகன் செய்த செயல்.. வாயடைத்து போன வெற்றிமாறன்
விஜய்:
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய், ஜீவன் – காந்தி என இரட்டை வேடத்தில் நடித்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் GOAT. இதில், விஜய்யின் ஜீவன் என்ற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
விடுதலை:
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு விடுதலை படத்தின் 2 – ம் பாகம் வெளியானது. இதில், சேத்தன் மிகவும் மோசமான காவலாளியாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார்.