ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி
ஒன்று வீதியை விட்டு விலகியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகவேகத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தியதன் காரணமாக அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து
விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும்
படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டி பெரும் சேதமடைந்துள்ளதோடு, விபத்து குறித்து மேலதிக
விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

