தக் லைஃப்
கடந்த வாரம் வெளிவந்த தக் லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சிம்பு நடித்திருந்தார். மேலும் அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அகில்-ஜைனப் வயது வித்தியாசம் இவ்வளவா?
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வியை சந்தித்துள்ளது. இப்படியொரு தோல்வியை இப்படம் சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
OTT
தக் லைஃப் திரைப்படத்தை ரிலீஸுக்கு பின் 8 வாரங்கள் கழித்துதான் OTT ஒளிபரப்ப வேண்டும் என நெட்பிளிக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால், படம் படுதோல்வியடைந்துள்ள நிலையில் முன்கூட்டிய OTT ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் OTT ரிலீஸ் குறித்து அறிவிப்பு எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

