தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை. அந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் அபிநய்.
அந்த படத்திற்கு பிறகு அவர் ஜங்க்ஷன், தாஸ் போன்ற பல படங்களில் நடித்தார். மேலும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்களும் அவருக்கு உதவி செய்யவில்லை. பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கடும் வறுமையில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அவர் பேட்டி கொடுத்தார்.
மருத்துவமனையில் அனுமதி
சாப்பிட கூட வழியில்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிட்டி வருவதாக அவர் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இப்படி வறுமையில் வாடிய அவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறாராம்.