களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் டிக்டோக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கோபாவக்க பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புலத்சிங்கள, அதுர பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சமூக ஊடகமான டிக்டொக் மூலம் சந்தேக நபருடன் நட்பை ஏற்படுத்தியதுடன் அது காதல் உறவாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம்
கடந்த ஜனவரி மாதம் தெல்மெல்ல பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

இதன் போது காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காதலியான சிறுமியை, சந்தேக நபரான காதலன் தவிர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

