சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் கூட்டணி சேர்வதாக அறிவிக்கப்பட்ட படம் STR48. இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தான் நீண்ட காலமாக தொடங்காமல் இருக்கிறது என்றும் செய்தி வந்துகொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் STR48 படம் டிராப் ஆகிவிட்டது என்றும் கூட செய்திகள் சமீபத்தில் பரவியது. அந்த கதையை அஜித்திடம் இயக்குனர் கூறி இருக்கிறார், சிம்புவுக்கு பதில் அவர் நடிக்க போகிறார் என்றும் ஒரு வதந்தி பரவ தொடங்கி இருக்கிறார்.
சிம்பு மறைமுக பதிலடி
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் சிம்பு ட்விட்டரில் பதிலடி கொடுத்து இருக்கிறார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து “Time tests what’s truly worth it” என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதனால் STR48 டிராப் ஆகவில்லை என்பதை அவர் உறுதி செய்து இருக்கிறார்.
Time tests what’s truly worth it. https://t.co/rHsZ6va8J0
— Silambarasan TR (@SilambarasanTR_) January 2, 2025