தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தவர்களே தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்கள், இவர்கள் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilankumaran) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியை (NPP) தோற்கடிப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதுடன் எமது கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக போலிப் பிரசாரம் செய்கின்றார்கள்.
இவர்களைப் பார்க்கும் போது எனக்கு கவலையாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயந்து இவர்கள் எங்கே இருந்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (TNA) இணைந்தவர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள். துரோகிகள் பட்டியலில் இவர்கள் தான் சேர்க்கப்பட வேண்டும்.
உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக நாளை (17) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்“ என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/eqSELvugOdU

