முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சியில் பிளவு – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானமே என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் (P. Sathyalingam
) தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

கட்சி யாப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் இறுதியானது என்று தமிழரசுக் கட்சியின் சிரேட உப தலைவர் சி. வி. கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

கூட்டுத் தீர்மானம்

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து, அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் | Tna Main Party Itak To Support Sajith Decision

இது தொடர்பில் கட்சியின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை.

மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம்.

மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள். மாவை.சேனாதிராஜாக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.

மத்திய குழுவின் தீர்மானம்

உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் | Tna Main Party Itak To Support Sajith Decision

மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவுக்கு அதரவு வழங்குவது என்பது. அதனையே அறிவித்தோம்.

எதிர்வரும் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது. அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.

மூத்த துணைத்தலைலவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை.சேனாதிராஜாவுடன் கதைப்பார் என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்