எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(ranil wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளது.
தற்போது பொதுஜன பெரமுனவின் ஒரு குழு அதிபர் ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அதேவேளை, நாமல் ராஜபக்சவின்(namal rajapaksa) தலைமையில் மற்றுமொரு குழு எதிராக செயற்பட்டு வருகின்றது.
பொதுவான ஒப்பந்தம்
இந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையில் பொதுவான ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம்
ஜூலை நடுப்பகுதியில் அதிபர் தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.