தமிழ் சினிமா 2024
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளிவரும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்கள் என்ன என்பதைத் தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
இந்த ஆண்டு வசூல் ரீதியாக ரூ. 100 கோடிக்கும் மேல் முதலில் வசூல் செய்த படம் அரண்மனை 4. அதன்பின் வெளிவந்த ஸ்டார், டிமாண்டி காலனி, கருடன், பி.டி சார், லப்பர் பந்து, ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றது.
2024ல் டாப் 10 மலையாள திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் விஜய்யின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன், ரஜினியின் வேட்டையன், தனுஷின் ராயன், விஜய் சேதுபதியின் மகாராஜா வசூலில் பட்டையைக் கிளப்பியது.
ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது, இந்த ஆண்டு வசூல் குறைவு தான் எனத் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், 2024ல் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.
டாப் 10 லிஸ்ட்
- கோட் – ரூ. 448 கோடி
- அமரன் – ரூ. 340
- வேட்டையன் – ரூ. 265 கோடி
- மகாராஜா – ரூ. 178 கோடி
- ராயன் – ரூ. 155 கோடி
- இந்தியன் 2 – ரூ. 150 கோடி
- கங்குவா – ரூ. 120 கோடி
- அரண்மனை 4 – ரூ. 105 கோடி
- தங்கலான் – ரூ. 80 கோடி
- டிமாண்டி காலனி – ரூ. 60 கோடி