பாக்ஸ் ஆபிஸ்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து டாப் நடிகரான அஜித்தின் 2 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. விடாமுயற்சி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடிக்க இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறவில்லை.
அப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்துள்ளனர். 15 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 172.3 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
டாப் 10
சரி நாம் இப்போது தமிழகத்தில் டாப் வசூல் செய்த படங்களின் விவரத்தை காண்போம்.
- லியோ- ரூ. 231.5 கோடி
- பொன்னியின் செல்வன் 1- ரூ. 222 கோடி
- கோட்- ரூ. 220 கோடி
- ஜெயிலர்- ரூ. 189 கோடி
- விக்ரம்- ரூ. 181 கோடி
- குட் பேட் அக்லி- ரூ. 172 கோடி
- அமரன்- ரூ. 158 கோடி
- வாரிசு- ரூ. 144.5 கோடி
- மாஸ்டர்- ரூ. 142 கோடி
- பிகில்- ரூ. 141 கோடி