முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வரிசை – அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் முதல் 10 தரவரிசையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் (Henley & Partners) சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 10 ஆவது இடத்துக்கு பின்தள்ளிச் சென்றுள்ளது.

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு

அமெரிக்க வரலாற்றில் இது அமெரிக்கக் கடவுச்சீட்டுக்கு வழங்கப்பட்ட மிகக்குறைந்த தரநிலை எனக் கூறப்படுகிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வரிசை - அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை | Top 10 Most Powerful Passport In The World

இதேவேளை, இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.

வீசா கட்டணம்

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் 40 நாடுகளிலிருந்து வருவோருக்கு வீசா கட்டணம் வசூலிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வரிசை - அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை | Top 10 Most Powerful Passport In The World

அதனடிப்படையில், இந்த 40 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரிடம் வீசா கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசா கட்டணம் வசூலிக்கப்படாத 40 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு….. பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கய அரசு ராஜ்யம், நேபாளம். சீனா,
இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலருஸ், ஈரான், ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், தென் கொரியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத், நோர்வே, துருக்கி, பாகிஸ்தான்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்