முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி அநுர தொடர்பான இரகசிய கணக்கெடுப்பு தகவல் கசிந்தது.!

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவுபெறவுள்ள நிலையில், இந்த அரசாங்கம் மீதான இளைஞர்களின் ஆதரவு தொடர்பில் ஒரு ரகசிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கணக்கெடுப்பானது, மேற்கத்திய இராஜதந்திரக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுளளதாக கூறப்படுகிறது.

இளம் வாக்காளர் ஆதரவு

இந்த கணக்கெடுப்பின் மூலம், நாட்டின் மிக முக்கியமான வாக்காளர்களில், அதாவது 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர தொடர்பான இரகசிய கணக்கெடுப்பு தகவல் கசிந்தது.! | Total Youth Support For Anura Kumara Government

அதன்படி, நாடு முழுவதும் இளம் வாக்காளர்களிடையே ஜனாதிபதிக்கு 72 வீத ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை வெறும் தேர்தல் புள்ளிவிபரமாக மட்டும் இல்லாமல், ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு, வரவு செலவுத்திட்ட பாணி, இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள் ஆகிய பல்வேறு நிலைப்பாடுளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆதரவுக்கான காரணம்

அதனடிப்படையில், 18–35 வயதுடைய மக்கள்தொகை வீதம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு மையமாக இருந்தது என பல ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்ததை கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர தொடர்பான இரகசிய கணக்கெடுப்பு தகவல் கசிந்தது.! | Total Youth Support For Anura Kumara Government

இந்நிலையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இளம் வாக்காளர்கள் பின்வருவனவற்றிற்காக ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

  • அரசு நியமனங்களில் உறவினர்களுக்கு சலுகை வழங்குவதை நீக்குதல் .
  • குறைந்த வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தை நடத்துதல்.
  • ஊழல் எதிர்ப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்.
  • இன நல்லிணக்கத்தைப் பேணுதல். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்