பாகிஸ்தானின்(pakistan) தென்மேற்கு பகுதியில் தொடருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அதனை சிறைப்பிடித்து, அதிலிருந்த 100 பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலோசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி 400 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தொடருந்து மீதே பலோச் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிணைக்கைதிளாக பிடிக்கப்பட்ட பயணிகள்
இதில்,தொடருந்து ஓட்டுநர் காயமடைந்ததையடுத்து தொடருந்து இடை வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 100 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பலோச் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில்,தொடருந்தில் இருந்த 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்
இது குறித்து பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.